tamilnadu

img

கோரிக்கை வலியுறுத்தி விதொச மனு கொடுக்கும் போராட்டம்

விழுப்புரம், ஜூலை 9- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள நூறு நாள்  வேலை, குடிநீர் உள்ளிட்ட  பொதுமக்களின்  பல்வேறு  அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்  கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் சார்பில்  ஒன்றியத் தலைவர் சி.ராஜ சேகர் தலைமையில் நடை பெற்றது. பின்னர் வட்டார வளர்ச்சி  அலுவலர் கேசவனிடம் அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்க நிர்வாகி கள் மனு அளித்தனர். தலைவர் வி.அர்ச்சுணன்,  செயலாளர் கே.சுந்தர மூர்த்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி, விவசாய சங்க மாவட்டப்  பொருளாளர் பி.சௌந்தர ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.பழனி, ஒன்றியச் செயலாளர் கே. உலகநாதன், பொருளாளர் கே.ரவி, கரும்பு விவசாயி கள் சங்கத் தலைவர் ஜி.துரை  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.