சென்னை:
சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடிப்பது 25 நாள்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.சென்னையில் கொரோனா
பாதிப்பு இரட்டிப்பாகும் காலம் தற்போது 90 நாள்களுக்கு மேலாகிறது. சென்னையைப் பொறுத்தவரை ஒரு தெருவில் 2 அல்லது 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டால், அந்த தெருவை கட்டுப் படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து வருகிறோம்.கொரோனா பாதிப்பு உச்சத்திலிருந்த காலத்தில் சென்னை மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது தீவிரமாக இருந்தது. ஆனால், முன்பை விட தற்போது அலட்சியம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆணையர் கோ. பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் தகரம் அடித்து மூடப்பட்டு வந்த நடைமுறைக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றமும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.