tamilnadu

img

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளித்திட திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிடுக... தலைமை நிர்வாக இயக்குனருக்கு டி.கே. ரங்கராஜன் கடிதம்.....

சென்னை:
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளித்திட திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கிட வேண்டும் என்றும் , இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்திற்கு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திருச்சி பெல் தொழிலாளர் சங்கத்தின்தலைவருமான டி.கே. ரங்கராஜன், பெல் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கோவிட்-19 இரண்டாவதுஅலை நமது சமுதாயத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவதுடன் இந்தநோயால் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.மே மாதத்தில் இந்தியாவில் தினந்தோறும் ஐந்து லட்சம் முதல் 8 லட்சம் வரைஇந்த நோயால் பாதிக்கப் படுவார்கள் என பல்வேறு ஆய்வாளர்கள் தங்கள் கருத்தை கூறியுள்ளனர். தமிழ்நாட்டிலும் இதன் பாதிப்பு அதற்கு ஏற்ப இருக்கும் என்பது அறிந்ததே.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பெருமளவில் ஆக்சிசன் மற்றும் வென்டிலேட்டர்கள்  அவசியம் தேவை என்பதை அறிவோம்.ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததன் காரணமாக பலபேர் இறந்து போகக் கூடியபரிதாபமான காட்சியை நாம்அன்றாடம் கண்டு வருகிறோம். மிக நீண்ட வரிசையில் நின்று எங்கெல்லாம் ஆக்சிஜன் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று தங் கள் அன்புக்குரியவர்களை பாதுகாக்க இந்த ஆக்சி ஜனை வாங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டாவது அலை பாதிப்பின் விளை வாக மருத்துவ ஆக்சிஜன்எந்த  அளவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்பதையும்  இதன் உற்பத்தி மற்றும் அவற்றை எடுத்துச் செல்வதில் உள்ள போக்குவரத்து வசதிகள் பற்றாக்குறை ஆகிய அம்சங்கள் பரிதாபமான முறையில் அம்பலப்பட்டு வருகிறது. இந்திய அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் மூன்றாவது அலைவரிசை தாக்குதல் இந்தியாவில் தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

ஆக்சிஜன் தொழில்நுட்பம் உள்ளது
எனவே மூன்றாவது அலை தாக்குதலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.  இந்த பின்னணியில் மருத்துவ ஆக்சிஜன்  தேவை மிக அவசரம்  மற்றும் அவசியம் என்பதை அறிவீர்கள் .இத்தகைய தருணத்தில் நமது நாட்டிற்கும் நமது மக்களுக்கும்  கடமை ஆற்றிட ஆக்சிஜன் பற்றாக்குறையை அனைத்து வகையிலும் போக்குவது அவசியமாகும். திருச்சி பெல் அலுவலர் தொழிற்சாலையில் மிகப்பெரிய ஆக்சிஜன் தயாரிப்புஆலை ஒன்று மேக்னோ ஹைட்ரோ டைனமிக்ஸ்யூனிட்டை செயல்படுத்து வதற்கு நம்மிடம் உள்ளது என்பதை அறிவீர்கள். இதன் அன்றாட உற்பத்தித் திறன் ஒரு ஷிப்டுக்கு 20 மெட்ரிக் டன் ஆகும். மேக்னோ ஹைட்ரோ டைனமிக் ஆலை உற்பத்தியை நிறுத்திய போது இந்த இரண்டு அலைகளையும் பிரித்து கலைத்துவிட்டோம்.இந்த ஆலையை உடனடியாக மீண்டும் புனரமைப்பது இயலாத ஒன்று. காரணம் இந்த ஆலையை மூடி மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது மற்றும் அதன்தொழில் நுட்பமும் மிகப்பழமையான ஒன்றாக உள்ளது.இருந்தபோதிலும் இதில்முக்கியமான அம்சம் என்னவென்றால் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான தொழில் நுட்பம் நம்மிடம்உள்ளது. அதற்கு தேவை யான தொழில்நுட்பத்திறன் வாய்ந்த தொழிலாளர்களும் நம்மிடம் உள்ளனர் .

ஹரித்வார் மற்றும் போபாலில் உள்ள நமது கிளை நிறுவனங்கள் ஏற்கனவே ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு விநியோகம் செய்து வருகின்றனர். இதுமிகவும் காலத்தே செய்யக்கூடிய செயல் ; மிகவும் பாராட்டுக்குரியது .சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி பெல் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது சம்பந்தமாக ஒருவழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

மே 6  அன்று உயர்நீதிமன்றம் இது சம்பந்தமாக விவாதித்து மத்திய, மாநில அரசுகள் சில விவரங்களை தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை குறிப்பிட விரும்பு கிறேன்.உயர்நீதிமன்றம் பாதகமான கருத்துக்களை குறிப்பிடுவதற்கு முன்பாக ஆக்சிஜன் உற்பத்தியை துவக்குவது நன்றாக இருக்கும் என குறிப்பிட விரும்புகிறேன் .எனவே ஒரு புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை புதிய தொழில் நுட்பத்துடன் உடனடியாக நிறுவி மிக விரைவில் உற்பத்தியை துவக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

தமிழ்நாட்டிற்கு வழங்குக!
இது மிக மோசமான கோவிட்‌ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நமது மக்களையும் சமுதாயத்தையும்  காப்பாற்றஉதவிடும் என குறிப்பிட விரும்புகிறேன்.உயர்ந்தபட்ச முன்னுரி மை அடிப்படையில் எங் களது இந்த கோரிக்கையை பரிசீலித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன். இந்திய அரசு திருச்சியில் உள்ள நமது ஆலையில் தயாரிக்கப்படும் அனைத்து தொழில் சார்ந்த ஆக்சிஜன் தயாரிப்புகளையும்  உடனடியாக நிறுத்திவிட்டு மருத்துவதேவைகளுக்காக அவற்றைதிருப்பிட வேண்டும் எனஉத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நமது பல யூனிட்டுகள் பாதிக்கப்பட்டு ள்ளது என்பதை அறிந்தேன். 

எனவே புதிதாக அமைக்கப்படும் இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை எதிர்காலத்தில் நமது பிற ஆலைகளின் தேவைகளுக்கும் பயன்படும் என்பதை  தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இதுபோன்ற ஆபத்தான காலங்களில் தமிழ்நாட்டில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதன் காரணமாக ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து வரும் நிலையில் தங்கள்தொழிற்சாலை உற்பத்திசெய்யப்படும் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த இக்கட்டான நிலைமையில் எங்களது ஆலோசனைகளை உரிய முறையில் பரிசீலனை செய்து ஒரு பொறுப்பான பெரு நிறுவனம் என்பதை நிலை நிறுத்துவீர்கள் என நம்புகிறோம். இவ்வாறு அதில் தெரி வித்துள்ளார்.

;