“குழந்தைகள் உட்பட அப்பாவி பாலஸ்தீனக் குடிமக்களை இனப்படுகொலை செய்து வரும் இஸ்ரேலை மனித இன பேரழிவு குற்றத்தைப் புரிந்துள்ளதாகக் குற்றவியல் மற்றும் நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இனப்படுகொலையை முன்னின்று நடத்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தப் பின்னணியில், ஒரு பயங்கரவாத நாட்டின் தூதருடன், தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு (SICCI) வர்த்தகச் சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டிருப்பது வெட்கக்கேடானது, துயரமானது. மனிதாபிமானமுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.