tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்கள் 36 ஆவது நாளாக போராட்டம்!

சென்னை, அக். 14 - தொழிற்சங்க உரிமைக்காக சாம்சங் தொழிலாளர்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டம், திங்களன்று 36-ஆவது நாளாகத் தொடர்ந்தது.

தொழிற்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழிலாளர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். 

ஆனால், இந்த இடத்திலும் போராட்டம் நடத்த காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அனுமதிக்க வில்லை.  தொழிலாளர்கள் அனை வரையும் கைது செய்வோம் என்று கூறினர். இதனால், தொழிலாளர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். மேலும், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதற்கிடையில், நீதிமன்ற உத்தர வுகளைச் சுட்டிக்காட்டி, காவல்துறை யினரிடம் சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன், சாம்சங் தொழி லாளர் சங்கத் தலைவர் இ. முத்துக் குமார் ஆகியோர் பேசினர். தொட ர்ந்து, அவர்களும் தொழிலாளர்களு டன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். 

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இந்நிலையில், சாம்சங் போராட்டத்தை, பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வரு வதற்காக அறிவிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் அறிவுரையின்படி இரண்டாவது கட்டமாக திங்களன்று (அக்.14) மாலை 5 மணிக்கு சென்னை தலை மைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது. இதை யடுத்து, தலைவர்கள் உடனடியாக சென்னைக்கு வந்தனர்.

முன்னதாக சுங்குவார்சத்தி ரத்திற்கு வருகை தந்த தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சாம்சங் தொழிலாளர்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 

தொழிற்சங்கப் பதிவு - நாளை விசாரணை 

இதனிடையே சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கத்தை பதிவு செய்யு மாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தக் கோரி சிஐடியு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு புதன்கிழமை (அக்.16) விசாரணைக்கு வருகிறது. நீதிபதி ஆர்.என். மஞ்சுளா இந்த வழக்கை விசாரணை செய்கிறார்.