சென்னை,ஜன.12- கன்னியாகுமரி மாவட் டம், களியக்காவிளையில் தமிழக-கேரளா எல்லை யில் சோதனைச் சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் வில்சன்(57) சுட்டுக் கொல்லப்பட்டது தமிழகத் தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. வில்சன் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப் படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்த வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்கப் படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.