சென்னை, மார்ச் 26- காங்கிரஸ் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொரோனா மருத்துவ வசதிக்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதேபோல், பாமகவின் இளைஞரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் 3 கோடி ரூபாயை முதலமைச்சர் எடப்பாடியிடம் நேரில் வழங்கினார்.