கிருஷ்ணகிரி, ஜூலை 5- நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் முகத்தில் கருப்புத் துணி கட்டி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் தேவன் தலைமையில் ஆர்ப்பாட்Lம் நடைபெற்றது. செயலாளர் திம்மராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர். தமிழக நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும், தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோத போக்கை கைவிட்டு சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும், தொழிற்சங்க நிர்வாகி கள், போராடுபவர்களுக்கு எதிராக காவல் துறையின் அடக்கு முறை, தாக்குதல் நட வடிக்கைகளை கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.