இந்து ராஷ்டிரம் என்றால் என்ன நூல் வாசிக்கப்பட்டு சிவப்பு புத்தக தினம் கடைபிடிக்கப்பட்டது.
கம்யூனிஸ்ட் அறிக்கை 1848 பிப் 21 அன்று வெளியானது. இந்நாளை கம்யூனிஸ்ட் இயக்கங்களால் சிவப்பு புத்தக தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாட்டில் சிபிஎம் கிளைகள் தோறும் மார்க்சிய அறிஞர் தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய ‘இந்து ராஷ்டிரம் என்றால் என்ன?’ நூல் வாசிக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக சிந்தாதிரிப் பேட்டை மேதின பூங்காவில் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஒன்றுகூடி நூலை வாசித்தனர். கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்