மதுரை:
புரெவிப்புயலால் இராமேஸ்வரம் தீவு கடந்த மூன்று நாட்களாக இருளில் மூழ்கியிருந்தது. நான்காவது நாளான சனிக்கிழமை காலை 12 மணிக்கு இராமேஸ்வரம் நகரத்திற்கு மட்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. இராமேஸ்வரத்தின் புறநகர் பகுதிகளுக்கு படிப்படியாக சனிக்கிழமை இரவுக்குள் மின்சாரம் விநியோகிக்கப் படும் என மின் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் மின் ஊழியர்கள் மற்றும்அதிகாரிகள் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பணியாற்றி இராமேஸ்வரம் நகரத்தின் மின் விநியோகத்தை சீர்படுத்தியுள்ளனர். இன்சுலேட்டர்களில் ஏற்படும் பிரச்சனையில் மின் விநியோகம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.