tamilnadu

img

நரம்பியல் துறைக்கு ரூ.65 கோடியில் புதிய கட்டடம் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அமைகிறது

சென்னை,மே 16- சென்னை ராஜீவ்காந்தி அரசு  பொதுமருத்துவமனை வளாகத்தில் ரூ.65 கோடியில் நரம்பியல் துறைக்குப் புதிய கட்டடம் கட்டப் பட்டு வருகிறது. இதுவிரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. பொதுப்பணித் துறையின் சார்பில் நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் ஏறத்தாழ1 லட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் (10,428 ச.மீ.) நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு உலகத் தரத்தில் பிரமாண்டமாக வடிவமைக் கப்பட்டு  விரைவாக கட்டி முடிக்கப் பட உள்ளது.

இந்தக் கட்டடத்தில் தரைத்தளத் தில் நரம்பியல் மருத்துவ புற நோயாளிகள் பிரிவு, நரம்பியல் அறுவை சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு, கதிரியக்கவியல் பிரிவு, இயன்மருத்துவ பிரிவு போன்ற வசதிகள்அமையும்.முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பொது வார்டுகள், மூன்றாம்தளத்தில் தீவிர  சிகிச்சை பிரிவுகள் போன்ற வசதி களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நான்காம் தளத்தில் நவீன வசதிகள்  கொண்ட 6 அறுவை சிகிச்சை  அரங்குகள், அறுவை சிகிச்சைக்கு  முந்தைய அறை, மீட்பு அறை போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை மூலம் கட்டப்படும் இக்கட்டடத் தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம்,  4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள்,  சாய்வுதளம், மருத்துவ திரவ  ஆக்ஸிஜன் இணைப்புகள், தீய ணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டுபொதுமக்களுக்கு சிறந்த நரம்பியல் துறை மருத்துவ  சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனை யான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2,500 படுக்கை  வசதிகளுடன் கூடிய இந்த அரசு  மருத்துவமனையில் 10,000முதல் 15,000 பேர் புறநோயாளிகளாக வருகை தந்து சிகிச்சை பெறு கிறார்கள். இந்த மருத்துவ மனைக்கு மேலும் பெருமை சேர்க் கின்றவகையில்  நரம்பியல் துறைக் கான புதிய கட்டிடம் அமையும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுப்பணித் துறையின் மூலம் கடந்த மூன்றாண்டு களில் 4,821.55கோடி செலவில் 941  மருத்துவ துறைச் சார்ந்த புதிய  கட்டடங்கள் கட்டிமுடிக்கப்பட் டுள்ளன. 

;