செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

கல்லூரி விளையாட்டு விழா

அறந்தாங்கி, ஏப்.4-புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விளையாட்டு விழா புதன்அன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வீ.ஜெயராஜ் தலைமையேற்று போட்டிகளை துவக்கி வைத்தார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அறந்தாங்கி காவல்துணை கண்காணிப்பாளர் கோகிலா பதக்கங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் அனைத்து துறை பேராசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக வணிகவியல் துறை தலைவர் என்.கே.ராஜேந்திரன் வரவேற்றார். நிறைவாக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜிவரெத்தினம் நன்றி கூறினார்.

;