செவ்வாய், ஜனவரி 26, 2021

tamilnadu

img

புதுச்சேரி மக்களவை தொகுதி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வாக்குகள் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி நகரக்குழு சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர் கள் சீனுவாசன், பிரபுராஜ், சத்தியா, பிரதேசக்குழு உறுப்பினர்கள் சந்திரா, சரவணன் ஆகியோர் உரையாற்றினர். பழையபேருந்து நிலையம் எதிரில் துவங்கிய பிரச்சாரம் முதலியார்பேட்டை, நெல்லித்தோப்பு, சாரம், காந்திவீதி, நேருவீதி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

;