tamilnadu

புதுச்சேரி மற்றும் கள்ளக்குறிச்சி முக்கிய செய்திகள்

மாணவிக்கு அனுமதி மறுப்பு: குடியரசுத் தலைவர் விளக்கமளிக்க கோரிக்கை

 , டிச.26- பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு அனு மதி மறுக்கப்பட்டதற்கு குடியரசுத் தலைவர்  விளக்கம் தர வேண்டும்  என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத் வலி யுறுத்தியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய்தத்,“மத்தியில் ஆளும் பாஜக  அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை யும், நாட்டையும் அழித்து வருகின்றது” என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  நடைபெறும் போராட்டங்கள் மீது நடத்தப்ப டும் காவல்துறையினர் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நாட்டு  மக்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்க குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப் பட்டுள்ளது. இது நாட்டு மக்களுக்கும், ஜன நாயகத்திற்கும் விரோதமானது என்றும் அவர் கூறினார். புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் பங்கேற்ற மத்திய பல்கலைக் கழக பட்ட மளிப்பு விழாவில் மாணவி ரபிஹா அனுமதி மறுக்கப்பட்டது துரதிஷ்டவசமானது. அதற்கான காரணங்கள் என்ன? இது பற்றி தெரிந்திருந்ததால் குடியரசுத் தலைவர் அதற்கான அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும், தனது விழாவில் மாணவி அனு மதிக்கப்படாததற்கு கண்டனம் தெரிவித்தி ருக்க வேண்டும். அந்த மாணவி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டிருக்க  வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருப்பதால் இதில் குடியரசுத் தலைவர் தனது நிலைப் பாடு என்ன? என்பதை விளக்கம் அளிக்க வேண்டும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர்  கிரண்பேடி பாஜகவின் முகவராக செயல்படு கின்றார். ஆளுநர் மாளிகை புதுச்சேரி பாஜக வின் தலைமையிடமாக செயல்படுகின்றது என்றும் சஞ்சய்தத் கூறினார்.

மலைவாழ் மக்களின் பட்டா நிலங்களை மீட்கக் கோரி மனு

கள்ளக்குறிச்சி. டிச, 26- கள்ளக்குறிச்சி மாவட் டம் கல்வராயன்மலை மலை வாழ் மக்களை ஏமாற்றி பொய்  யான ஆவணங்கள் மூலம் அபகரித்து வைத்துள்ள மலைவாழ் மக்களின் நிலங் களை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் மற்றும் அரசு தரிசு நிலங்கள் உள் ளிட்ட சுமார் 184 ஏக்கர் மலை  நிலங்களை மீட்டு மலைவாழ்  மக்களுக்கு இலவச நிலப் பட்டா வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலை மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித் துள்ளார். கல்வராயன்மலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தையாகுமார் மகன் வினோதன் கந்தையா என்பவர் அட்டவணை  ‘பி’ முதல் ‘எஃப்’ வரையான 150.23 ஏக்கர் அரசு தரிசு  நிலங்கள் மற்றும் மலைவாழ்  மக்களுக்கான ‘ஏ’ அட்ட வணை சொத்துக்களான 32.92 பட்டா நிலங்கள் உள்  ளிட்டவற்றை போலி ஆவ ணங்கள் மூலம் முறை கேடாக அபகரித்து அனுப வித்து வந்துள்ளார். அரசு  தொழிற்சாலை அமைப்ப தற்கு எனக்கூறி அரசு அதி காரிகள் உடந்தையுடன் மலைவாழ் மக்களின் பட்டா நிலங்கள் எழுதி வாங்  கப்பட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலையும் துவக்கப்  படவில்லை. நிலம் தந்தவர்க ளின் குடும்பத்திற்கு வேலை யும் தரப்படவில்லை. பின்னர் நிலம் தொடர் பான வழக்கு சங்கராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஓ.எஸ்.73/2010 என்ற வழக்கில் அளிக்கப் பட்டுள்ள தீர்ப்பானது மலை வாழ் மக்களின் நிலங்களை யும், அரசு மற்றும் வனத்துறை யின் நிலங்களையும் வினோ தன் கந்தையா முறைகேடாக அனுபவித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்நிலங் களில் வினோதன் கந்தையா வும், அவருடைய ஆட்களும்  மீண்டும் பிரவேசிக்காமல் இருக்கும் வகையில் வரு வாய் மற்றும் வனத்துறை யின் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,  மேற்கண்ட அட்டவணை யில் உள்ள நிலங்களை கல்வராயன் மலையில் வசிக்கும் நிலமற்ற மலை வாழ் குடும்பங்களுக்கு இல வசமாக நிலப்பட்டா வழங்க  வேண்டும் எனவும் டி.ஏழு மலை அம்மனுவில் வலி யுறுத்தியுள்ளார்.

வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் 8 பேர் போட்டியின்றி தேர்வு

திருவண்ணாமலை,டிச.26- திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கம் சார்பில், ஊராட்சி மன்ற உறுப்பினர்களாக 8 பேர் போட்டி யின்றி  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளியன்று (டிச.27) முதல் கட்ட தேர்தல் களத்தில் 6612 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.  1930 வாக்குச்சாவடிகளில், 8 லட்சத்து 65 ஆயி ரத்து 259 பேர் வாக்களிக்கின்றனர். இதற்கிடையே மேல்கரிப்பூர் வளர், வல்லம் கோவிந்த ராஜ், பெரும்பாக்கம் அலமேலு, கீழாத்தூர் செல்வராஜ், கோட்டகரம் பூங்காவனம், அமரேசன், அமுலு, கொளத்தூர் ஜெயராமன் ஆகியோர் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்  அனைவரும் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு மலை வாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன்  மற்றும் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க  மாநிலச் செயலாளர் கெங்காதுரை ஆகியோர் வாழ்த்து தெரி வித்தனர். மேலும், நடைபெறும் தேர்தலில், திருமணித்தாங்கல், செப்டாங்குளம், கீழ்கொவளைவேடு, தென்அரசம்பட்டு, ஊதிரம்பூண்டி உள்ளிட்ட 15 கிராம வார்டு உறுப்பினர் பதவி களுக்கு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்கத்தினர் போட்டியிடுகின்றனர்.

போலி நிதி நிறுவனங்கள்: காவல்துறை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி. டிச, 26- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக உள்ள போலி  நிதி நிறுவனங்களிடமும், நகைச் சீட்டு, தீபாவளி சீட்டு என  பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றும் நபர்களி டம் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரில் நகைச் சீட்டு, தீபாவளி சீட்டு நடத்தி ராகவேந்திரா நகை  கடையின் உரிமையாளர் பொதுமக்களிடம் 12 கோடி ரூபாய் அளவில் பணம் வசூலித்து விட்டு தலைமறைவாகி விட்டார். பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் அளித்ததன் பேரில் தலைமறைவாக இருந்த வர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் புதிய இடத்தில் செயல்படத் தொடங்கியுள்ள காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் கண்  காணிப்பாளர் “பொதுமக்கள் எந்த நிலையிலும் ஏமாறாமல்  எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், எந்த பாதிப்புக ளாக இருந்தாலும் இந்த அலுவலகத்தில் அதற்கான பிரிவு  அதிகாரிகளிடம் உரிய விபரங்களுடன் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியதோடு; காவல்துறைக்கு செய்தியாளர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.

வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏலம் நேரம் மாற்றம்

விழுப்புரம்.டிச.26- விழுப்புரம் மாவட்டம்,வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்தில் இனிமேல் பிற்பகல் ஒரு மணிக்கு நெல் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்துக்கு செஞ்சி  வட்டம் மட்டுமல்லாது பிற வட்டம், மற்றும் மாவட்டங்களில் பிற பகுதிகளில் இருந்தும் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வருகின்றன. தானிய வரத்து அதிகரிப்பு காரணமாக அங்கு  7,500 மெட்ரிக் டன் பல்லடுக்கு சேமிப்புக் கிடங்கு கட்டடம்  கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கொண்டு  வரும் நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்ய  இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் செஞ்சியில் இருந்து  13 கி.மீ. தொலைவில் உள்ள வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்லு மாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதாவது, வளத்தியை கடந்து வரும் விவசாயிகளும், வளத்திக்கு அருகாமையில் உள்ள விவசாயிகளும் நெல்  மூட்டைகளை அந்த விற்பனைக் கூடத்துக்கு எடுத்துச்செல்ல லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுசெஞ்சி விற்பனைக் கூடத்  தில் காலையில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், பின்னர் வளத்தி விற்பனைக் கூடத்துக்குச் சென்று பகல் ஒரு  மணியளவில் நெல் ஏலத்தில் கலந்து கொண்டு கொள்முதல்  செய்வார்கள்.  இத் தகவலை விழுப்புரம் விற்பனைக் குழுச் செயலாளர் ஆறுமுகராஜன் தெரிவித்துள்ளார்.

;