சென்னை, ஏப். 11-இந்தோ இன்டர்நேஷனல் பிரிமியர் கபடி லீக்(ஐபிகேஎல்) முதல் பதிப்புக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கபடியின் பக்கம்தனது கவனத்தை திருப்பியுள்ளார். முதல் சீசன் போட்டிகள் 2019, மே 13- ஜூன் 4 வரை, புனே, மைசூர், பெங்களுரு ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 44 ஆட்டங்கள் நடைபெறுகின்றன, எட்டுஅணிகள் இடம்பெறுகின்றன, அவற்றுள் 16 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 160 விளையாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர். உறுதிசெய்யப்பட்ட ஊதியம், பரிசுப் பணம் தவிர அனைத்து விளையாட்டு வீரர்களும் கிடைக்கின்ற வருவாயில் 20 விழுக்காடு பங்கைப் பெறுவார்கள். இப்போட்டிகள் வயாகாம் 18, டிடிஸ்போர்ட்ஸ் உட்படபல மொழிகளின் நெட்வொர்க்கில் ஒளிபரப்பு செய்யப்படும்.