tamilnadu

img

புற்றுநோய்க்கு துல்லியமான சிகிச்சை வழங்கும் பிராச்சிதெரபி சாதனம்

சென்னை,ஆக.12
புற்றுநோய்க்கான வலுவான, துல்லிய மான சிகிச்சை அளிக்கும் பிரிவு டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.

  இதற்காக புதிய ஹை டோஸ் ரேட் பிராச்சிதெரபி சிஸ்டம் ஃபிளெக்ஸிட்ரான் என்ற சாதனம் பொருத்தப்  பட்டுள்ளது. பிராச்சிதெரபி என்பது கதிரியக்க  சிகிச்சையின் ஒரு வடிவமாகும். புற்றுக்கட்டி யானது அதிகபட்ச கதிரியக்கத்தைப் பெற வும், சுற்றியுள்ள சாதாரண திசுக்கள் இருக் கும் பகுதிகளில் கதிரியக்க டோஸ் விரை வாக வீழ்ச்சியடையவும் இந்தக் கருவி உதவு கிறது என்று மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.ஜி. கோவிந்தராஜன் கூறினார். 

இந்த சிகிச்சை முறை வெளிப்புற பீம்  கதிரியக்க சிகிச்சையுடன் சேர்த்தோ அல்லது குறிப்பிட்ட புற்றுநோய் வகை களுக்கு முழுமையான சிகிச்சையாகவோ பயன்படுத்தப்படலாம். நாக்கு, மூச்சுக் குழாய், உணவுக்குழாய், மென்மையான திசுக்கள், மார்பகம், புரோஸ்டேட் (Prostate)  போன்ற பல புற்றுநோய் வகைகளை நிர்வகிப்பதில் பிராகிதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. அதேநேரம், கர்ப்பப்பை வாய் மற்றும் எண்டோமெட்ரியம்  புற்று நோய்களுக்கு பிராகிதெரபி ஒரு திட்ட வட்டமான சிகிச்சை முறை என்றும் அவர் கூறினார்.