பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர மாணவர்களுக்கான தேர்வுகள் தொடங்கும். இதுகுறித்த விரிவான அட்டவணை இணைய தளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.