tamilnadu

கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

அம்பத்தூர், பிப். 23- அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள முகப்பேரில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முகப்பேர் வேணுகோபால் நகர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் ஒரு கும்பல் தகராறு செய்துள்ளது. அப்போது சிலர் தட்டிகேட்டதால் ஒரு கடை மீது அந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசியது.