tamilnadu

img

பகுதி நேர ரேசன் கடை கேட்டு மனு

பகுதி நேர ரேசன் கடை கேட்டு மனு

திருவள்ளூர், ஏப்.23- முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்த வெங்கடாபுரம் கிரா மத்திற்கு பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம்,  திருத்தணி வட்டம்,  வேலஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடாபுரத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. மேலும் மக்கள் ரேசன் கடைக்கு 3 கி.மீ தூரம் கடந்து செல்லவேண்டிய அவலநிலை உள்ளது. இத னால் குறித்த நேரத்திற்கு சென்று பொருட்கள் வாங்க முடியவில்லை என்கிறார்கள். எனவே வெங்கடா புரத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (ஏப்23),   திருத்தணி வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர். உங்கள் கோரிக்கையை உயர் அதி காரிகளுக்கு தெரிவிப்பதாக வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் சி.பெருமாள், மாவட்ட துணை தலைவர்  ஏ.அப்சல் அகமத், சிபிஎம் வட்டச் செயலாளர் வி.அந்தோணி  மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.