தமுஎகச, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் ஒற்றுமை கலைவிழா புதுச்சேரி கிருஷ்ணா நகரில் நடைபெற்றது. கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சிபிஎம் உழவர்கரை நகரச் செயலாளர் நடராஜன், தமுஎகச புதுச்சேரி தலைவர் வீர.அரிகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் பாவலர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் ராம்ஜி, முனியம்மா, பாஸ்கர், மாரியப்பன் ஆகியோர் பேசினர். முன்னதாக கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு திருக்குறள் பரிசாக வழங்கப்பட்டது.