இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!
சென்னை, டிச. 10 - வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி செவ்வாய்க்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைவான நாட்களே பேரவை கூடுகிறது!
எடப்பாடி பழனிசாமி கவலை
சென்னை, டிச. 10 - தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூடுதல் செலவுக்கான துணை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “குறைந்த நாட்களே சட்டசபை கூட்டம் நடந்துள் ளது. இப்படி இருந்தால் மக்கள் பிரச்ச னைகளை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டு வர முடியும். திமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் பேரவைக் கூட்டம் என்று கூறியிருந்தீர்கள். அப்படி பார்த்தால் 400 நாட்கள் நடந்திருக்க வேண்டும்; ஆனால் 119 நாட்கள் தான் நடந்துள் ளது” என்று கூறினார். இதற்கு விளக்கம் அளித்த பேரவைத் தலைவர் அப்பாவு, மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சட்டப்பேர வை கூட்டத்தை அதிக நாட்கள் நடத்த முடியவில்லை என்றார்.