சென்னை,ஜன.21- குடியரசு தின விழா கொண்டாட்டங்களின்போது விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு களை அதிகரிக்கும் படி அறிவுறுத்தியது. அதன்படி நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், வழி பாட்டு தலங்கள், மக்கள் அதிக மாக கூடும் முக்கியமான ரயில் மற்றும் பேருந்து நிலை யங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளன. சென்னை மீனம்பாக் கம் விமான நிலையத்திலும் பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக் கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை, பன்னாட்டு மற்றும் உள்நாட்டு புறப்பாடு, வருகை பகுதி வளாகங்கள் அருகே நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இரு சக்கர வாகனங்களை அடுக்கு மாடி நிறுத்துமிடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க விமான பாது காப்பு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். விமான நிலைய கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட நாட்களாக நிற்கும் வாகனங்களை தீவிர மாக சோதனை செய்யவும் உத்தர விடப்பட்டு உள்ளது.
மத்திய தொழில் பாதுகாப்பு படையி னரின் அதிரடி வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிற்கும் பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணிக் கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ச்சி யாக அமலில் இருப்பதால் அதை மேலும் தீவிரமாக செயல் படுத்துகின்றனர். பாஸ்கள் வழங்குவதிலும் கடுமை யான கட்டுப்பாடுகள் அமல்படுத் தப்பட்டு உள்ளன.
வருகிற 30-ந் தேதி வரை முக்கிய பிரமுகர்களுக்கான பாஸ் வழங்க தடை செய்யப்பட் டுள்ளது. சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாது காப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதி நள்ளிரவு வரை இந்த பாது காப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தற்போது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் குடியரசு தின விழா நெருங்கும்போது பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.