tamilnadu

img

அதானி, அம்பானிக்காக 2000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு... துணைபோகிறது எடப்பாடி அரசு.... கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

சென்னை:
அதானி, அம்பானியின் லாபவெறிக்கு எண்ணூர், பழவேற்காடு பகுதி சதுப்பு நிலங்கள் 2000 ஏக்கரை ஆக்கிரமிக்க துணைபோகும் அதிமுக எடப்பாடி அரசுக்கு மக்கள் பாடம்புகட்டுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை காமராஜர்துறைமுகத்திற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதன் திட்டத்தைத் தொடங்கிவைக்க வருகை தந்த மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் (நவ.21) சனிக்கிழமையன்று தாழங்குப்பத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.அதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

எண்ணூர் நீர் பரவல்8000 ஏக்கரில் 2000 ஏக்கர் ஆக்கிரமிக் கப்படும் ஆபத்து உள்ளது. இதனால் வடசென்னை மாவட்டம் மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எச்சரித்து வருகிறது.காமராஜர் துறைமுகம் விஸ்தரிப்பு என்ற பெயரில் சதுப்பு நிலமரங் களை வெட்டுவது இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிப் பது போன்ற நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.மழை வெள்ளம் தடுக்கப்படும் அபாயத்தால் வெள்ளப் பாதிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?பெருமுதலாளிகளை வாழ வைக்க மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்படுகிறது.

இந்த திட்டம் எந்த ஆட்சியில் நிகழ்ந்தாலும் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்போம். காமராஜர் துறைமுகத்தை விரிவுபடுத்துவதன் மூலம்மக்களும்,அரசும் பலனடையப் போகிறதா என்றால் அதுவும் இல்லை.மாறாக தனியார் முதலாளிகளான அதானி, அம்பானிகள் கையில் தாரைவாக்கப்பட உள்ளது.சென்னை மக்களின் வெள்ளஅபாயத்தை பற்றி கவலைப்படாமல் தானடித்த மூப்பாக செயல்படுகிறது.ஏற்கனவே, எட்டுவழிச் சாலை போடுகிற திட்டத்தை கட்டாயம் அமல் படுத்துவோம் என மத்திய அரசு சொல்லி வருகிறது.கோவையில் இருந்து சேலம் வழியாக 8 வழிச் சாலையை சென் னையில் இணைத்து காமராஜர் துறைமுகத்தில் சேர்த்து மக்களின் அனைத்து வளங்களையும் அம் பானி, அதானி கையில் வாரி வழங்கும் வியாபார பேரம் நடந்து கொண்டுஇருக்கிறது.இயற்கை நீரோட்டத்தை தடுப்பது, சுற்றுச்சூழலை பாதிப்புக்குள் ளாக்குவது போன்ற மக்கள் விரோதசெயலை மார்க்கிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் பார்த்துக் கொண்டிருக்காது. இந்த போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்காவிட்டால் வீதியில் அனைத்து கட்சிகளையும், மக் களை திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பாலகிருஷ்ணன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள் எழுப் பிய கேள்விகளுக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “காமராஜர் துறைமுகம் விரிவாக்கம் செய்ய நிதிஒதுக்கி தொடக்க விழா நடத்துகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடிஅறிவித்திருப்பது பெரிய நாடகம்” என்றார்.அரசு விழாவில் அரசியல் பிரச்சாரம் செய்வது, எதிர்க்கட்சிகளை சகட்டுமேனிக்கு விமர்சிப்பது, கிண்டல் செய்வது போன்ற செயல் களில் முதலமைச்சர் எடப்பாடி ஈடுபடுவது அரசியல் நாகரிகம் அல்ல என்றும் அவர் கூறினார்.மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களிடம் கடுமையாகவும், வேல்யாத்திரை என்ற பெயரில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜகவினரிடன் சமரசமாகச் செல்வதும் எந்தவகையில் நியாயம் என்றும் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.காவிரி மண்டலத்தை பசுமைபாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கும் முதல்வர் எடப்பாடியார் இன்னொரு பக்கம் சாயப்பட்டறை ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது வேடிக்கையாக உள்ளது எனவும் கடுமையாக சாடினார்.சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் பேசுகையில், “எண்ணூர் முகத்துவாரம் தூர்வாரப்படாமல் அபாயகரமான நிலையில் உள்ளது. விரிவாக்கம் என்ற பெயரில் 2ஆயிரம் ஏக்கர் நிலம்ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாம்பல் கழிவுகளால் நீர்நிலைப் பாதைகள் அடைக்கப்பட்டு வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் கிராமத்து மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்து விட் டனர்.

காமராஜர் துறைமுகத்திற்கு கடலுக்குள் இருக்கும் சுமார் ஆயிரம் ஏக்கர் மணற்குன்றுகளை அழித்துநிலப்பரப்பாக மாற்றம் செய்ய உள்ளனர்” என்றார்.இந்த பகுதியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்திற்கு இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். கடலோரத்தையும் மீனவர்களை பாதுகாக்கும் அரணாக உள்ள மணற்குன்றுகள் அழிக்கப்படுவதன் மூலம் மனிதச்சமூகம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்கவுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்டசெயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், மாவட் டக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;