tamilnadu

காலமானார்

 சென்னை, நவ. 14 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி பகுதி, காந்திநகர் கிளை உறுப்பினர் பழனிவேல் மனைவி லோகநாயகி உடல் நலக்குறைவால் வியாழனன்று (நவ.14) காலமானார். அவருக்கு வயது 63. அன்னாரது உடலுக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் பாரதிநகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.