tamilnadu

img

மோடியின் வீடியோவுக்கு மட்டும் துரித நடவடிக்கை

நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப்,  கஜோல் ஆகியோரின் முகங்களை வேறு சில ரின் முகங்களோடு பொருத்தி வெளியிடப் பட்ட போலி ஆபாச வீடியோக்கள் (டீப்  பேக் வீடியோ) சமூக வலைதளங்க ளில் வைரலாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரத மர் மோடியையும் விட்டுவைக்காமல் அவர் பெண்  களோடு சேர்ந்து “கார்பா” நடனம் ஆடுவது போன்ற  வீடியோவை மர்மநபர்கள்  இணையத்தில் லீக்  செய்ய, தற்போது அந்த வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப்  ஆகிய நடிகைகளின் “டீப் பேக்” வீடியோ வெளி யாகிய சமயத்தில் (கடந்த வாரம்) ஒன்றிய மின்னணு  தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர்,”இதுபோன்ற போலி வீடியோக்களை தயா ரித்து வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என சாதாரண எச்சரிக்கை  விடுத்தார். ஆனால் பிரதமர் மோடியின் “டீப் பேக்”  வீடியோ என்றதும் நேரடியாக சாட் ஜிபிடி குழு வினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது ஒன்றிய அரசு. இந்த விவகாரம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்  ளது. காரணம் பெண்கள், நடிகைகள் வீடியோ வெளி யான பொழுது எடுக்கப்படாத கடும் நடவடிக்கை,  பிரதமர் மோடி வீடியோ வெளியானதும் எடுக்கப் பட்டுள்ளது என்பதுதான்.