tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வடசென்னை எம்பி

வடசென்னை மக்களவை உறுப்பினராக 2ஆவது முறையாக வெற்றி பெற்ற டாக்டர் கலாநிதி வீராசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து பெற்றார்.

மதுபோதையில் காவலர் மீது தாக்குதல்

சென்னை, ஜூன் 8- மதுபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்தியவர் களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் காவலர் குடி யிருப்பு நுழைவு வாயிலில் இளைஞர்கள் சிலர்  போதை யில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்போது காவலர்  குடியிருப்புக்கு வந்த ஆயுதப்படை காவலர் அருண் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது மது போதையில்  இருந்த இளைஞர்கள் காவலர் அருணை தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து அருண் திருவொற்றியூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர்  வழக்குப் பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமரா  உதவியுடன் காவலரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, ஜூன் 8- தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமான நிலையே நீடிக்கிறது. பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து வருவ தையே பார்க்க முடிகிறது. இதே போல் வெள்ளி விலையும்  உயர்ந்துக்கொண்டே வந்தது.

இந்த நிலையில், வாரஇறுதி நாளான சனிக்கிழமை யன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு  1,520 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்குரூ.190 குறைந்து ஒரு  கிராம் ரூ.6,650-க்கும் சவரன் ரூ.53,200-க்கும் விற்பனை யானது. தங்கத்தைப்போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் 50 காசுகள் குறைந்து  ஒரு கிராம் வெள்ளி 96 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

;