tamilnadu

img

சென்னை: இரவில் உள்வாங்கிய கடல்

சென்னையில் இரவில் கடல் உள்வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் பகுதிகளில் உள்ள கடற்கரையில் நேற்று நள்ளிரவு திடீரென கடல் 15 மீட்டர் வரை உள்வாங்கி மணற்பரப்பு தெரிய துவங்கியது. இதனால் கடலைப் பார்க்க வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின் 1 மணி நேரம் கழித்து கடல் பழைய நிலைமைக்குத் திரும்பி உள்ளது. 
ஏற்கனவே இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்தியாவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னையில் திடீரென கடல் உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

;