சென்னை, ஜூன் 1- “ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு பிர தமர் மோடி சும்மா தான் இருப்பார்” என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித் துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முன்னாள் முதல மைச்சர் கருணாநிதியின் நூற் றாண்டு நிறைவையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற் பாட்டில் கலைஞரின் வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சி அமைக் கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்த நடிகர் பிரகாஷ் ராஜ், பின் னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.
அப்போது அவர் கூறி யதாவது: “கலைஞருடன் நிறைய அனு பவங்கள் உள்ளது எனக்கு. அவ ருடன் பழக எனக்கு வாய்ப்பு கிடைத் தது மிகவும் மகிழ்ச்சி. என்னை அன்பாக பார்த்த மனிதன் அவர். கலைஞர் கருணாநிதி அதிகமாக இலக்கியம், கொள்கைகளைப் பற்றி பேசுவார். கலைஞருக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் கலைஞ ரின் கொள்கைகளையும், சிந்தனை களையும் உயிர்ப்போடு வைத்திருக்கி றார். இந்தியா வில் நம்பர் 1 மாநி லமாக தமிழ்நாடு உள்ளது,
இன் னும் முன்னேறும். முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பணிகளால் எவ்வளவு பேர் வாழ்க்கையில் உயர்ந்துள்ளார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்று விட்டது. இனிமேல் நாங் கள் தமிழ்நாட்டைப் பற்றி கவ லைப்பட மாட்டோம். பாஜக தோற்பதற்கு எல்லா விஷயங்க ளையும் பிரதமர் மோடி செய்து விட்டார். நிறைய சூட்டிங் பார்க்க மக்கள் வருவார்கள், ஆனால் கன்னியாகுமரி சூட்டிங்கிற்கு அவரே ஆடியன்ஸைக் கூட்டிச் செல்கிறார். தமிழகத்தில் இருந்து அவரை திருப்பி அனுப்பியாச்சு. நாடு முழுவதிலும் அனுப்பி விடு வார்கள் என நம்புகிறேன். ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி சும்மாதான் இருப்பார். அவரையும் இந்த கண்காட்சியை காண அழைக்கலாம்.”
இவ்வாறு பிரகாஷ் ராஜ் தெரி வித்தார்.