சென்னை:
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சாதிக் பாட்ஷா கொலை வழக்கு, அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசிதட்டி மீண்டும் விசாரிப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
2ஜி விவகாரம் தொடர்பாக திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, இதுதொடர் பாக முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என அறிவித்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, ஜெயலலிதாவைச் சட்டத்துக்கு விரோதமாகச் சொத்து சேர்த்தவர் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.இதுதொடர்பாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் உச்சம் பெற்றது.மு.க.ஸ்டாலின், ஆ.ராசா இருவரையும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். தற்போது அமைச்சர்கடம்பூர் ராஜுவும் ஆ.ராசாவுக்குஎதிராக கொந்தளித்துள்ளார்.தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச் சர் கடம்பூர் ராஜூ, “ஆ.ராசாவுக்கு நாவடக்கம் வேண்டும். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஒரு வாசகத்தை எழுதுவோம், ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்கிறார் ஆ.ராசா. இடித்தால் அவருடைய கை வெட்டப்படும். துணிச்சலாகச் சொல்கிறோம்” என்று மிரட்டல் விடுத்தார்.