tamilnadu

“தொழிலாளர்களைத் தேடி மருத்துவம்”

சென்னை,ஜன.6- சென்னை பள்ளிக் கரணையில் கேப்டன் சீனிவாசமூர்த்தி ஒன்றிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் வைர விழா நடைபெற்றது. ஆயுஷ் மருத்துவத்திற்கான ஒன்றிய இணை  அமைச்சர் முன்ச்பாரா மகேந்திரா மற்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுகையில், “இந்தியா வில் வேறு எங்கும் இல்லாத  வகையில் தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன”என்றார். துரை எய்ம்ஸ் மருத்து வக் கல்லூரி அமையவுள்ள பகுதிக்கு அருகே, ஒன்றிய அரசின் நிதி உதவியில் ஆயுர்வேதக் கல்லூரிக்கான புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மக்களைத் தேடி மருத்து வம் திட்டம் மேலும் விரிவு படுத்தப்பட்டு தொழி லாளர்களை தேடி மருத்து வம் என தொழிற்சாலை களுக்கு சென்று தொழி லாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலை. அமைக்கப்பட வேண்டும் என்று மசோதா நிறை வேற்றப்பட்டு ஆளுநருக்கு  அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அந்த மசோதா வும் கிடப்பில் உள்ளது. எனவே ஒன்றிய அரசு இதில்  தலையிட்டு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைய உறுதுணையாக இருக்க வேண்டும். சித்த மருத்துவத்திற்கான எய்ம்ஸ் மருத்துவமனை திருச்சியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஒன்றிய அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.