tamilnadu

img

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 7 மணியுடன் நிறுத்தம்

நிவர் புயல் காரணமாக இரவு 7 மணிக்கு மேல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று இரவு 7 மணிக்கு மேல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
மேலும், சூழலைப் பொறுத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.