சென்னை, ஜன.24- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒரு பகுதி யாக சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலை ஞர்கள் மற்றும் அமைப்பு களுடன் இணைந்து தமிழ் கலாச்சாரத்தின் இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி 24 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை கலைத்தெரு விழா குழு மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பின்வரும் தேதிகளில் கலைநிகழ்ச்சி நடைபெறும். வெள்ளியன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை விமானநிலையம் மற்றும் வண்ணாரப் பேட்டை மெட் ரோ ரயில் நிலையத்தில் ஒயி லாட்டம், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் ஒத்த செவுரு- தமிழ் ராக் பேண்ட் மற்றும் சோலோ தியேட்டர் சுனந்தா, பரத் நாராயண் குழுவினர் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜனவரி 27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆன்ம ஜோதி என்ற அமைப்பு, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் கர்நாடக குவார்டெட் என்ற இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை - சத்தியபாமா ரோட்டராக்ட் கிளப்பின் உறுப்பினர்கள், சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து விமான நிலைய மெட்ரோ வரை ரயிலில் இசை நிகழ்ச்சியை வழங்கு கின்றனர். ஜனவரி 30 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை ஆலந்தூர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம்) ஆலந்தூர் மெட்ரோ முதல் சென்ட்ரல் மெட்ரோ வரை மெட்ரோ ரயிலில் அபிஷேக் கின் ஸ்டாண்ட் அப் காமடி மற்றும் பிந்துமாலினியின் மெல்லிசை நிகழ்ச்சி நடை பெறுகிறது. மாலை 5.45 மணி முதல் 6.30 மணி வரை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலை யத்தில், பிரீத்தி பரத்வாஜின் பரத நாட்டியம் மற்றும் தீபனின் பறையாட்டம் நடை பெறுகிறது. பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஆன் தி ஸ்டீரிட் ஆப்பை சேர்ந்தவர்கள் இசை நிகழ்த்த உள்ளனர்.