tamilnadu

தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்!

சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. பகல் நேரங்களில் வெளி யில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளது. இருசக்  கர வாகனத்தில் செல்பவர்கள் வியர்வை மழையில் நனைந்தபடியே கொளுத்தும் வெயிலில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி பக லில் அதிகரித்து காணப்படும் வெயிலால் இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு  சில இடங்களில், ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 24  வரை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும்.

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30 முதல் 50 விழுக்காடாக இருக்  கக்கூடும். மற்ற நேரங்களில் 40 முதல் 75  விழுக்காடாகவும், கடலோரப் பகுதிகளில் 50 முதல் 80 விழுக்காடாகவும் இருக்கக் கூடும். 

தென்மாவட்டங்களில்  மழைக்கும் வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப்ரல் 23 வரை மழைக்கும் வாய்ப்புள்ளது.  மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட  வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்  பட்டுள்ளது.