தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டிசம்பர் 4 வெள்ளியன்று இடதுசாரிக் கட்சிகளின் ஆவேச மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமையில், ஏர்க்கலப்பையுடன் பேரணியாக வந்த இடதுசாரி கட்சியினர் ரயில் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.