கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னை, ஜூன் 5- கண்ணியத் தென்றல் காயிதே மில் லத்தின் 129-ஆவது பிறந்த நாளை யொட்டி. திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, சி.வி. கணேசன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அன்னைத் தமிழ் மொழிக்காக வும் - இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் - மத நல்லிணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளில் அவ ரது தொண்டை நினைவுகூர்வோம்!” என குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகார வெறிக்கு
அணை போட்டுள்ளோம்!
கி.வீரமணி பாராட்டு
சென்னை, ஜூன் 5- “மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி, வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, மறுக்க முடியாத, மகத்தான வெற்றி யை தமிழ்நாடு - புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வைத்து, “இந்த நாற்பது - இனியவை நாற்பது” என்பதை உணர்த்தி, பிர கடனப்படுத்தியதற்குக் காரணமான முத லமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்ட வார்த்தைகளே இல்லை!” என்று திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறி யுள்ளார்.
“முதல்வர் மு.க. ஸ்டாலினின் கடும் உழைப்பு, திட்டமிடுதலுக்கு முன்பு காவிகளின் பொய்யுரை எடுபட வில்லை. காவிக் கறை வட இந்தியா வில் கலைய, கரையத் தொடங்கி விட்டது. சர்வாதிகார வெறிக்கு அணை போடப்பட்டுள்ளது. அந்த அணை முழுமையாவதற்கு முழுக் கவனமும் அரசியல் வியூகமும் தேவை! அதற்கும் தமிழ்நாடு கலங்கரை வெளிச்சமாக என்றும் இருக்கும் என்பது உறுதி” என் றும் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.
விசிகவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து!
திருமாவளவன் மகிழ்ச்சி
சென்னை, ஜூன் 5- “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கி, 25 ஆண்டு களுக்குப் பிறகு மாநில கட்சிக்கான அங்கீ காரத்தைப் பெற்றுள் ளோம்” என அதன் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார். “25 ஆண்டுகால உழைப் புக்கு கிடைத்த அங்கீகாரம் இது” என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், “தேர் தல் முடிவுகள் காங்கிரசுக்கு மிகப் பெரிய வெற்றியாக அமைந்திருக்கிறது. ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக் கூறு கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளோம்” என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
மோடி ஆட்சிக்கு எதிராக மக்கள் மகத்தான தீர்ப்பு!
வைகோ வரவேற்பு
சென்னை, ஜூன் 5- பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட் சிக்கு எதிராகத்தான் மக்கள் இந்த தேர்த லில் வாக்களித்திருக் கிறார்கள் என்றும், பிரதமர் பதவியில் நீடிக்கும் தார்மீக உரி மையை மோடி இழந்திருக்கிறார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த 18-ஆவது மக்களவைத் தேர்தலில், இந்தியத் திருநாட்டு மக்கள் ஜனநாய கத்தை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். பத்தாண்டு காலம் பாசிச அரசு நடத்திய பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டி இருக்கிறார்கள். 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று ஆணவமும் அதிகாரத் திமிர் கொப்பளிக்க தேர்தல் பரப்புரைகளில் மதவெறி ஊட்டி எதேச் சதிகார போக்குடன் நடந்து கொண்ட வர்களுக்கு மக்கள் சக்தி என்றால் என்ன என்பதை இந்த தேர்தல் உணர்த்தி உள் ளது.
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்று ஒற்றை இந்துத் துவ தேசியவாதத்தை நிலைநிறுத்த முயன்றவர்களுக்கு 18-வது மக்க ளவை தேர்தலில் சரியான அடி விழுந்தி ருக்கிறது. பாஜகவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைந்த ‘இந்தியா’ கூட்டணி இந்திய மக்களின் நம்பிக்கை யைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது” என்று வைகோ குறிப் பிட்டுள்ளார்.