சென்னை, மே 24-நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக் குடி தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற கூட்டணியின் திமுக வேட்பாளர் கனிமொழி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 லட் சத்து 47 ஆயிரத்து 209 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டு தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்த கனிமொழி மெரினா கடற்கரைக்குச் சென்றார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று, அங்கு தனது வெற்றி சான்றிதழை வைத்து தந்தைக்கு அஞ்சலி செலுத்தினர். அவருடன் தனது கணவர் மற்றும் தாயார் ராஜாத்தியம்மாள் உடனிருந்தனர்.