tamilnadu

என்பிஆர் பணிகளை நிறுத்திட அரசாணை வெளியிடுக தமிழக முதல்வருக்கு இந்திய தேசிய மக்கள் மன்றம் கோரிக்கை

சென்னை, ஜன. 20- என்பிஆர் 2020 பணிகளை தமிழகத்தில் நிறுத்திட அரசாணை வெளியிடக் கோரி தமிழக முதல்வருக்கு இந்திய தேசிய மக்கள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பாளர் ஐ.பி.கனக சபாபதி, ஒருங்கிணைப்பாளர் பி.ரத்தின சபாபதி, ச.ஜாகிர் உசேன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் திங்களன்று (ஜன.20) தலைமைச் செயலாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்சஸ் சட்டம் 1948iன் கீழ் நடத்தப்படும் சென்சஸ், அரசு மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்கள் உருவாக்கத் தேவைப்படும் புள்ளி விவரங்களை மக்களிடமிருந்து பெறப் படும் விவரங்களிலிருந்து பெற்றுத் தரும். நல்வாழ்வு திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க ஆதார் பயன்படுத்தப்படு கிறது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்க குடியுரிமை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கை. என்பிஆர், என்.ஆர்.சி., சிஏஏ ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடை யது, ஒரே நோக்கத்திற்கானது. இது குடியுரிமையினைத் தீர்மானிக்கும் நோக்கம் கொண்டது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டிற்கும் நோக்கம் வெவ்வேறாக உள்ள போது, இரண்டும் வெவ்வேறு சட்டத்தின் கீழ் செயல்படும் போது இரண்டையும் இணைத்து 2020 ஏப்ரல் 1 முதல் நடத்த திட்டமிடுவது நியாயமற்றது மக்களை ஏமாற்றக் கூடியதுமாகும். குடியுரிமை சட்டம் 1955, 2003லும் 2019லும் திருத்தப்பட்டுள்ளது. இந்த திருத்தங்களில் கூறப்பட்டுள்ள கூறுகள் மக்கள் மனங்களில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கியுள்ளது. பதட்ட மான சூழலில் வழக்கை விசாரிப்பதே கடினம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ள சூழலில், மக்கள் மனங்களில் உருவாகியுள்ள பதட்டத்தையும் அச்சத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் அரசு தன்னிச்சை யாக ஒரு முடிவை எடுத்து நடைமுறைப் படுத்த முயல்வது மக்களாட்சி மாண்புக ளுக்கு எதிரானது. இந்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். என்பிஆர் 2020ஐ நிறுத்திவிட்டு, சென்சஸ் 2021க்கான வீட்டு கணக்கெடுப்பு மட்டும் சென்சஸ் சட்டம் 1948  கீழ் 2020 ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை இணைத்து நடத்த இயலாது என்பதை திட்டவட்டமாக மத்திய அரசிற்கு தமிழக அரசு தெரிவிக்க வேண்டும். என்பிஆர் 2020 பணிகளை தமிழகத்தில் நிறுத்திட அரசாணை வெளியிட்டு, சென்சஸ் சட்டத்தின் கீழ் 2021 சென்சசுக்குத் தேவைப்படும் வீட்டுக்  கணக்கெடுப்பு பணியை மட்டுமே ஏப்ரல் 1 முதல் நடத்த வேண்டும் எனவும் இதற்காக மக்களிடம் கேட்கப்படும். விவரங்கள் சென்சஸ் சட்டத்திற்கு உட்பட்டே இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசை இந்திய  தேசிய மக்கள் மன்றம் கோருகிறது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள் ளது. அதேபோல் இந்த கோரிக்கையை வலியுறுத்தக் கோரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கும் மனு அளித்துள்ளனர்.

;