அரும்பாக்கம் மெட்ரோ ரயில்நிலையம் அருகில் விருகம்பாக்கம் கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.