சென்னை, டிச.7- சென்னை கடலோர பகுதியில் கடந்த 3 மற்றும் 4- ஆம் தேதிகளில் சுமார் 17 மணி நேரம் மிக்ஜம் புயல் நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரம் வரலாறு காணாத மழையை எதிர் கொள்ள நேரிட்டது. இடை விடாத மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.
இந்நிலையில் சென்னை யில் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன, எந்தெந்த பகுதிகளில் குறை வான பாதிப்பு ஏற்பட்டது, என்பது பற்றி அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் வெளி யாகி உள்ளன.
சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சுமார் 30 விழுக்காடு பகுதிகள் புயல் மழையால் மிக மிக கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச் சேரி, பெரும்பாக்கம், தாம்பரம், முடிச்சூர், மீனம் பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு, கோடம் பாக்கம், மாம்பலம் பகுதி களில் அதிகபட்ச பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
அம்பத்தூர், சிந்தா திரிப்பேட்டை பகுதியில் மிக மிக குறைவான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு வகையான ஆய்வுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில் மழை பாதிப்பிற்கான காரணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.மழைநீர் கால்வாய்கள் மற்றும் தண்ணீர் வெளி யேறும் பகுதிகளில் ஆக்கிர மிப்பு காரணமாக மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டி ருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் 3 விழுக்காடு மட்டுமே மழை பாதிப்பில் இருந்து தப்பி உள்ளன. 97 விழுக் காடு பகுதிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளன.