டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது பாஜகவின் ஏபிவிபி குண்டர்கள் தாக்குதல் நடத்தி யதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டக் குழு சார்பில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ்.தேவேந்திரன், மாவட்டப் பொருளாளர் எஸ்.கலையரசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்கணேஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் என்.கங்காதரன் ஆகியோர் பேசினர்.