tamilnadu

img

அரசியலமைப்பு நெறிமுறைகளை இந்தியா கூட்டணி பாதுகாக்கும் ‘நாட்டை வழி நடத்தும் 40/40’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, ஜூன் 5- மக்களவைத் தேர்தலில் திமுக  கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்  றுள்ளது. 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தற்போது முழு மையான வெற்றியைக் கண்டுள் ளது.

இந்நிலையில், ‘இந்தியா’ கூட்  டணி கட்சித் தலைவர்கள் கூட்டத் தில் கலந்து கொள்வதற்காக திமுக  தலைவரும், தமிழக முதல்வரு மான மு.க.ஸ்டாலின் தில்லி சென்  றுள்ளார். முன்னதாக திமுக தொண்  டர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்  பிட்டிருப்பதாவது:

தமிழக வாக்காளர்களுக்கு கோடானு கோடி நன்றி!

தி.மு.க தலைமையிலான அணி  மீது முழுமையான நம்பிக்கை வைத்து, நாற்பது தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை அள் ளித் தந்த தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களுக்கு கோடானுகோடி நன்றி.

ஒன்றிய ஆளுங்கட்சியின் அதி கார பலம், அடக்குமுறைத்தனம், அவதூறு பரப்புரைகள் இவற்றைத்  தகர்த்தெறிந்து நாற்பதுக்கு நாற் பது என்ற மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மதவாத அரசி யல் சக்திகள் மலரவே முடியாதபடி  செய்திருக்கிறோம்.

இதற்கு பெருந்துணையாக இருந்த உடன்பிறப்புகள் அனை வருக்கும் என் நெஞ்சம் நிறைந்த  நன்றியை உரித்தாக்கிக் கொள்கி றேன். தோழமைக் கட்சித் தலை வர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்  அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

மக்களின் நம்பிக்கை இழந்த பாஜக கூட்டணி

ஒன்றிய ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை என்  பதைத்தான் தனிப்பெரும்பான்மை பெற முடியாத பாஜகவின் சரிவு  காட்டுகிறது. அவர்களின் கோட்டை  என நினைத்திருந்த மாநிலங்களில் இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் சரிக்குச் சரியாக இந்தியா கூட்ட ணியின் உறுப்பினர்கள் இடம்பெற விருப்பது ஜனநாயகம் கட்டிக் காக்  கப்பட்டிருப்பதன் அடையாளமா கும்.

சர்வாதிகாரத்தனமான ஒற்றை யாட்சி முறைக்கு மக்கள் ஆதர வாக இல்லை என்பதை இந்திய  நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்  காட்டுகின்றன. ஆன்மீக நம்பிக்கை களை அரசியல் சுயலாபத்துக்கு பயன்படுத்த நினைக்கும் மதவாத  சக்திகளை, கோவில் கட்டிய மண்  ணிலேயே வீழ்த்திக் காட்டியிருக்கி றார்கள் இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள்.

சர்வாதிகாரத்திற்கு கடிவாளம் போட்ட  இந்தியா கூட்டணி!

சிறுபான்மை மக்களின் நெஞ் சில் இருந்த அச்ச உணர்வு நீங்கி  இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்திய  அளவிலும் நமது கூட்டணி பெற்  றுள்ள வெற்றியால் சர்வாதிகா ரத்திற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. 

மதவாதத்தையும் வெறுப்பரசி யலையும் விதைக்க நினைப்பவர் கள் தமிழ்நாட்டில் எப்படியாவது கால் ஊன்றி விட வேண்டும் எனத்  திட்டமிட்டார்கள். நாட்டின் பிரதமர் 8 முறை தமிழகத்துக்கு வந்தார். திமுக மீது அவதூறு சேற்றை அள்ளி வீசினார். ஆனால், திமுக  வெறுப்புப் பிரச்சாரம் செய்ய வில்லை. பொறுப்பான முறையில்  தேர்தல் களத்தில் தன் கடமையை ஆற்றியது. 

மக்களை நாம் நேரடியாக சந்  தித்தோம். மூன்றாண்டுகால ஆட்சி யின் திட்டங்கள் அவர்களைச் சரி யாகச் சென்று சேர்ந்திருப்பதை உறுதி செய்தோம். நம்மிடம் மேலும் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்  கள் என்பதைப் புரிந்துகொண்டோம். 

நம்மீதான நம்பிக்கையே வெற்றியாக விளைந்தது

‘இந்தியா’ கூட்டணியால்தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் - ஜன நாயகத்தை மீட்க முடியும் என்ப தைச் சுட்டிக்காட்டினோம். பன்  முகத் தன்மை கொண்ட – மதநல்லி ணக்கத்துடனான - சமூகநீதி இந்தி யாவைப் பாதுகாத்திட இந்தியா கூட்டணியால்தான் முடியும் என்ப தைக் கொள்கை வழியில் எடுத்து ரைத்தோம். அதன்மீது மக்கள் நம்  பிக்கை வைத்தார்கள். அவர்களின்  நம்பிக்கைதான் இன்று முழுமை யான வெற்றியாக விளைந்திருக்கி றது.

நாற்பதுக்கு நாற்பது என்ற இந்த  வெற்றி இந்திய அரசியலின் அடுத்த  ஐந்தாண்டுகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜன நாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள்  அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கும் வகையில், நாட்டை வழி நடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

;