tamilnadu

img

சென்னையில் 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் உள்ள முன்னணி ஜுவல்லரி நிறுவனங்கள் உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள ஜுவல்லரியில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அக்கடையின் உரிமையாளர் கீழ்ப்பாக்கத்திலுள்ள இருக்கும் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த ஜூவல்லரி நிறுவனம் நகை மொத்த வியாபாரத்தில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதால், இவர்களின் வணிக தொடர்பின் அடிப்படையில் மும்பையில் சோதனை நடத்தி வருகிறார்கள். அண்மையில் சர்ச்சையில் சிக்கிய தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள ஒரு நகை கடையிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.