tamilnadu

img

டெல்டா மாவட்டங்களில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி

 இந்தியா முழுவதும் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாகவும் (ஏப்.19 முதல் ஜூன் 1 வரை), தமிழகத்தில் ஏப்.19 இல் ஒரே கட்டமாகவும் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாயன்று (ஜூன் 4) நடைபெற்றது. அதன்படி, தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.

மயிலாடுதுறை தொகுதியின்
காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா அமோக வெற்றி

மயிலாடுதுறை, ஜூன் 4 - மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் ஆர்.சுதா 5,18,459 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக  வேட்பாளர் பி.பாபு-வைவிட 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2,47,276 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பாபு இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 

6 சட்டமன்ற தொகுதிகளை உள்ள டக்கிய மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதி யில் 86,100 ஆண்களும், 91,815 பெண் களும், 4 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில்  80,319 ஆண்களும், 82431 பெண்க ளும், 2 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் 93, 162 ஆண் வாக்காளர்களும், 1,00,872 பெண் வாக்காளர்களும், ஒரு மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 89,873 ஆண் வாக்காளர்களும், 94,858 பெண்  வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலி னத்தவர்களும், கும்பகோணம் சட்ட மன்றத் தொகுதியில் 89,058 ஆண் வாக்காளர்களும், 92,808 பெண் வாக்காளர்களும், 2 மூன்றாம் பாலி னத்தவர்களும், பாபநாசம் சட்ட மன்றத் தொகுதியில் 87,028 ஆண் வாக்காளர்களும், 94,798 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலி னத்தவர்களும் என 10,83,143 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள  பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவ லர் ஏ.பி.மகாபாதி, தேர்தல் பொது பார்வையாளர் கண்ஹூராஜ் ஹச் பகதே  ஆகியோர் கண்காணிப்பில், 706 அலுவ லர்கள் 111 நுண்பார்வையாளர்கள் வாக்கு  எண்ணிக்கையில் ஈடுபட்டனர். 23  சுற்றுகள் நடைபெற்ற வாக்கு எண்ணிக் கையில் இறுதியாக இந்தியா கூட்டணி யின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

வெற்றி பெற்றதற்கான சான்றிதழை  வேட்பாளர் ஆர்.சுதாவுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.பி.மகா பாரதி, தேர்தல் பொது பார்வையாளர் கண்ஹூராஜ் ஹச் பகதே ஆகியோர் வழங்கினர்.

அவருடன் அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், மாநிலங்களவை உறுப்பினர்  எஸ்.கல்யாணசுந்தரம், பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா.எம்.முருகன், காங்கிரஸ் மாவட்டத் தலைவரும் சட்ட மன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார்  ஆகியோர் உடனிருந்தனர்.

தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி வெற்றி

தஞ்சாவூர், ஜூன் 4- தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி யில் திமுக சார்பில் போட்டியிட்ட ச.முரசொலி மொத்தம் 5,02,345 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தஞ்சாவூர் மக்களவைத் தொகு தியில் 68.27 சதவீதம் வாக்குகள் பதி வாகின. இந்த தேர்தலில் மன்னார் குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேரா வூரணி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,710 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள், பலத்த பாது காப்போடு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டன.

ஒவ்வொரு சட்டப்பேரவை தொகு திக்கும் தலா 14 மேஜைகள் போட்டப் பட்டு, வாக்கு எண்ணிக்கை நடை பெற்றது. மொத்தம் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடர்ந்து அனைத்து சுற்று களிலும் திமுக வேட்பாளர் ச.முர சொலி முன்னிலை வகித்தார். திமுக  வேட்பாளர் ச.முரசொலி 5,02,245 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக வேட்பாளர் பி. சிவநேசன் 1,82,662 வாக்குகளும், அவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் 1,70,613 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிமா யூன் கபீர் 1,20,293 வாக்குகளும் பெற்றனர்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 
மதிமுக வேட்பாளர் 
துரை.வைகோ வெற்றி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 4- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இதில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் அமைத்து, 84 மேஜைகளிலும், தபால் ஓட்டு எண்ணிக்கை 11 மேஜைகளிலும் 25 சுற்றுக்களாக ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளராக கருப்பையா, பாஜக கூட்டணி சார்பில் அமமுக வேட்பாளராக செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜேஷ் உட்பட 35 பேர் போட்டியிட்டனர்.

இந்தத் தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும், 239  மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தொகுதி முழுவதும் 699 இடங்களில் 1665 ஓட்டுச் சாவடிகள் அமைத்து வாக்குப் பதிவு நடந்தது. 

வாக்குப்பதிவு நாளன்று (ஏப்.19), 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும், 102 மூன்றாம் பாலின வாக்காளர்களும் வாக்களித்தனர். திருச்சி தொகுதியில் மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்ததன் மூலம் 67.52 சதவீதம் வாக்குப் பதிவானது.

தபால் ஓட்டுக்கள் இரண்டு சுற்றுகளாகவும், கந்தர்வகோட்டை சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 18 சுற்றுகளாகவும், புதுக்கோட்டை, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் 19 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன. அதேபோல், திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 20 சுற்றுகளாகவும், திருவெறும்பூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் 22 சுற்றுகளாகவும், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் பதிவான ஓட்டுகள் 25 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிகளைக் கண்காணிக்க 3 பேரவைத் தொகுதிகளுக்கு, தலா ஒரு பார்வையாளரை இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பார்வையாளராக தினேஷ்குமாரும், திருவெறும்பூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 3 சட்டசபைத் தொகுதிகளுக்கு ராஜீவ் பிரசாத்தும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 1,627 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய, மாநில போலீசார், துணை ராணுவப் படையினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் 3 அடுக்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வாக்கு எண்ணும் பணி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் செவ்வாய் அன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் 8665 பேர் தபால் வாக்கு அளித்திருந்தனர். இந்த வாக்குகள் எண்ணும் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். அப்போது பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் ராஜு பிரசாத், தினேஷ் குமார் ஆகியோர் ஆட்சியருடன் நேரில் ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு தொடர்ந்து எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகளில் மதிமுக வேட்பாளர் துரை. வைகோ முன்னிலை வகித்தார். இதையடுத்து மின்னணு எந்திரத்தில் ஓட்டுக்கள் எண்ணும் பணி சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக தொடங்கியது. முதலில் இருந்தே மதிமுக வேட்பாளர் துரை.வைகோ தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். 

மாலை 4 மணி நிலவரப்படி 12 ஆவது சுற்று முடிவில், அதிமுக வேட்பாளர் கருப்பையாவை விட 1,73,686 வாக்குகள் வித்தியாசத்தில் மதிமுக வேட்பாளர் துரை. வைகோ 2,93,555 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். இறுதிச் சுற்றில், துரை.வைகோ 5,38,408 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

அதிமுக வேட்பாளர் கருப்பையா 2,27,326 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 99,453 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1,06,676 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.

;