tamilnadu

img

சென்னையில் நாளை முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.45

சென்னையில் நாளை முதல் ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.45க்கு விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
சென்னையில் தொடர் மழை காரணமாக ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வெங்கயத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று சென்னையில் வெங்காயம் விலை ரூ.110 வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பண்ணை பசுமைக்கடைகளில் பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.