tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

சென்னை ஐஐடியில்  இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் 

சென்னை,மே 21- மெட்ராஸ் ஐஐடி நிர்வாகமும், இசை யமைப்பாளர் இளையராஜாவும் இணைந்து ஐஐடி வளாகத்தில் “மேஸ்ட்ரோ இளைய ராஜா இசை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பள்ளி  மையம்” துவங்கியுள்ளனர். 

முற்றிலும் மூங்கிலால் பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையம், அடுத்த ஒரு ஆண்டில் முழுமையாக செயல் ்பாட்டுக்கு வர உள்ளது. பல்வேறு துறைகள் சார்ந்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை ஐஐடி செய்து வருகிறது. பல்துறை சார்ந்த சாதனையாளர்களின் பெயரில், அவர்களது நன்கொடை மூலம், பல்வேறு சிறப்பு மையங்கள் மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் ஏற்கெனவே இயங்கி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவும் இணைந்திருக்கிறார்.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கையெ ழுத்தானது. இசையமைப்பாளர் இளைய ராஜாவும், ஐஐடி இயக்குநர் காமகோடியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக் கொண்டனர். இளையராஜாவுடன் மெட்ராஸ் ஐஐடி இசை ஆராய்ச்சி சிறப்பு மையத் திற்கான கல்வெட்டையும் இளையராஜா திறந்து வைத்தார்.

அம்பத்தூரில் 250 கிலோ குட்கா பறிமுதல்
அம்பத்தூர், மே 21- அம்பத்தூர் வழியாக குட்காவை கடத்தி வந்த வியாபாரியை காவல்துறையினர் செவ்வாயன்று கைது செய்தனர்.

புழல் - தாம்பரம் புறவழிச்சாலை, அம்பத் தூர் சுங்கச்சாவடி வழியாக அரசால் தடை  செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி  வரப்படுவதாக அம்பத்தூர் காவல் நிலை யத்திற்கு செவ்வாயன்று ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக அதி வேகமாக வந்த ஒரு வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது அதில் 250  கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குட்காவை கடத்தி வந்த வியாபாரியை பிடித்து அம்பத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர் கொடுங் கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஜோசப் (45) என்பதும், இவர் பெங்களூருவில் இருந்து அம்பத்தூர் வழியாக குட்காவை கடத்தி வந்து சென்னை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்ததும், இவர் மீது குட்கா கடத்தி விற்பனை செய்த வழக்குகள் நிலு வையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜோசப்பை கைது செய்து, குட்காவையும், வேனையும் பறி முதல் செய்தனர்.

18 ஆண்டுகளாக நீதிமன்றத்தில்  ஆஜராகாத இளைஞர்
அம்பத்தூர், மே 21-  போரூரில் கொலை முயற்சி வழக்கில் 18 ஆண்டுகளாக ஆஜரா காமல் இருந்த இளைஞரை தேடப்படும் குற்றவாளியாக பூந்தமல்லி நீதி மன்றம் அறிவித்துள்ளது.

பூந்தமல்லி அருகே போரூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (21). கடந்த 2006ஆம் ஆண்டு பிரகாஷை கொலை முயற்சி வழக்கில் போரூர் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நீதி மன்ற பிணையில் வெளியே வந்த பிரகாஷ், இந்த வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜரா காமல் இருந்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் பிரகாஷ் தொடர்ந்து காவல் துறையினரிடம் சிக்காமல் 18 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து பூந்தமல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

;