சென்னை, ஆக.29- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடை பெற்றது. இதில் துணை ஆணையர் (பணிகள்) கோவிந்தராவ், முதன்மை தலைமை பொறியாளர் புக ழேந்தி, தலைமை பொறியா ளர்கள் மகேசன், நந்தகுமார், காளிமுத்து, துரைசாமி உள்ளிட்ட கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆணை யர் பிரகாஷ் பேசியதாவது: சென்னை மாநகராட்சி பகுதி களில் அனைத்து வடிகால்க ளையும் பொறியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்து எந்தெந்த வாடிகால்களில் தூர்வார வேண்டும் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி இந்த கல்வாய்கள் தூர்வார வேண்டும். இந்த பணிகளை செய்வதற்கான நிர்வாக அனுமதியை வட்டார துணை ஆணையர்களே வழங்குவர். மழைநீர் வடிகாலில் நீர் சேரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு தூர்வார வேண்டும். தூர்வாரியது தொடர்பான பணிகளை ஜிஐஎஸ் முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும். தூர்வாரும் கழிவுகளை குப்பைக் கிடங்கில் அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தான் கொட்ட வேண்டும். தூர்வாரப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கினால் அதற்கு செலவு செய்யப்பட்ட தொகை அந்த பணியை செய்த ஒப்பந்த தாரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வீடுகளில் ஆய்வு
மழைநீர் சேகரிப்பு பணி தொடர்பாக மழைநீர் வடி கால் துறையின் தலைமை பொறியாளர் நந்தகுமார் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சியில் இதுவரை 2 லட்சத்து 35 ஆயிரம் வீடுக ளில் ஆய்வு செய்யப்பட்டு ள்ளது. இதில் 65 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டி உள்ளது. எனவே இந்த வீடுகளில் வடகிழக்கு பருவ மழைக்கு முன்பாக இந்த வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குளங்களை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு ள்ளது’’ என்றார்.