tamilnadu

img

அமைப்பு ஒரு முடிவெடுத்தால்..

இந்தியாவை உலுக்கிய வைக்கம் எனும் சிறு புத்தகத்தை படித்து முடித்த பின்னர் அதை அவ்வளவு எளிதாக கடந்து விட முடியவில்லை. ஏனென்றால் அதன் உள் ளடக்கம் மற்றும் அரசியல் மிக ஆழமானது. வரலாற்றை திரித்து கூறும் அரசியல் காலமிது. இந்த சூழலில் தேவையான ,உண்மையான வரலாற்று உண்மைகளை எளிமையாக தொகுத்துள்ளார் தோழர். யு.கே .சிவஞானம். 

ஆறு தலைப்புக்களில் உள்ள  கட்டுரை களின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலின் சிறப்புகளாக மூன்று  முக்கியமான தகவல்களை சொல்லலாம். ஒன்று கேரள மண்ணில் நடைபெற்ற ஒரு மாபெரும் சமூக நீதிக்கான போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு எவ்வளவு அளப்பரியது என்பதை இந்த  புத்தகம் சொல்கிறது. அந்த மகத்தான போராட் டத்தில் பங்கேற்று சமூக நீதியை நிலை நாட்ட எப்படி அனைத்து தரப்பு மக்களும் மன முவந்து வந்தனர் என்பதும், சாதிய அடையா ளங்களை துறந்து, தான் ஊழியனாக இருக்கும் ஒரு அமைப்பு ஒரு முடிவெடுத்தால் அது நிச்சயமாக சரியானதாக இருக்கும் எனும் திடமான நம்பிக்கை இருந்ததால் தான் வைக்கம் போராட்டம் வெற்றி பெற்றது. அந்த சாதனையை நிகழ்த்தி காட்டிய ஊழியர்களின் பட்டியல், அவர்கள் செய்துள்ள பணிகள் என் பதை தொகுத்ததின் மூலம், அந்த வீரர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியை நம்மால் காலம் கடந்து கூட நினைவு கூர முடிகிறது. 

அதிலும் சிறப்பு தந்தை பெரியார் தலை மையில் அனைத்து சாதியினரும், மத சிறுபான்மை யினரும் ஒரு சேர களத்தில் பணியாற்றி இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.  

இரண்டாவதாக, வைக்கம் போராட்டத்தில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் பங்க ளிப்பு பற்றிய தகவல்கள்… நம்மை உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்தும் …சற்றே யோசித்து பாருங்கள். வைக்கம் போராட்டம் இந்து மதப் பழமைவாதக் கோட்பாடுகளில் ஒரு உடைப்பை ஏற்படுத்த நடத்தப்பட்ட ஒரு அறவழி இயக்கம். அதற்கு முன்னணியில் இருந்தவர் ஒரு கிறித்துவர். அவருக்கு தனிப்பட்ட முறையில் அதனால் எவ்வித ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும் தன் இயக்கத்தின் தலைவர்கள் இட்ட கட்டளையை ஏற்று சிறிதும் பிசகாமல் வழி நடத்திய அந்த மாபெரும் போராளியின் பங்களிப்பு எவ்வளவு போற்றத் தகுந்தது என்பதை இந்த நூலை வாசிக்கும் போது நிச்சயம் தெரியும். அந்த தீரமிக்க போராளிக்கு ஆண்டுதோறும் இடதுசாரிகள் மட்டுமே அவர் தம் நினைவு நாளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். அந்த தலைவருக்கு தமிழகம் முழுமைக்கும் விழா எடுக்க வேண்டியது அரசின் கடமை.. அது இந்தப் போராட்டத்தின் நூற்றாண்டிலாவது துவங்கட்டும். 

மூன்றாவதாக, குருவாயூர் ஆலய நுழை வுப் போராட்டம் அந்த மண்ணில் எத்தகைய மாற்றத்தை அடிப்படையில் உருவாக்கி, அதன் தாக்கம் இன்று வரையில் எப்படி நீடிக்கிறது என்பதை இப்புத்தகத்தில் உள்ள கட்டுரையின் மூலம் உள்வாங்க முடிகிறது. கம்யூனிஸ்ட்கள் வறட்டுத் தத்துவம் பேசுபவர்கள், சமூக சமத்து வத்திற்காக சிறு துரும்பைக் கூட அசைக்கா தவர்கள் என சிலர் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் புரிதலுக்கு மட்டு மல்லாமல், தற்போதைய தலைமுறைக்கு குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்க ளுக்கு இந்த உண்மைகள் தெரிய வேண்டி உள்ளது. அதையும் இந்த புத்தகம் செய்துள்ளது. 

இந்தியாவில் ஒரு பெரும் தாக்கத்தை உரு வாக்கிய வைக்கம் போராட்டம் பல சமூக மாற் றங்களை உருவாக்க அடி உரமாக அமைந்தது என நிச்சயமாக சொல்ல முடியும். 

அப்படிப்பட்ட போராட்டத்தில் மகாத்மாவின் பங்கு என்ன, அவர் எவ்வகையில் இதற்கு பக்க பலமாக இருந்தார் என்பதையும் இந்த புத்தகம் நமக்கு பகிர்கிறது. இந்த நூலை நமக்கு தந்துள்ள தோழர் சிவஞானம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இந்தியாவை உலுக்கிய வைக்கம் 
யு.கே.சிவஞானம் 
பாரதி புத்தகாலயம் வெளியீடு 
விலை: ரூ.30