tamilnadu

img

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பதவி உயர்வை மறுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் -2023ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வை பறிக்கின்ற புதிய விதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.21) ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ரிப்பன் மாளிகை பகுதி தலைவர் ருக்குமாங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலாளர் ம.அந்தோணிசாமி, இணைச்செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.