வியாழன், மார்ச் 4, 2021

tamilnadu

img

தங்கம் விலை சவரனுக்கு  ரூ.144 குறைந்தது

சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்து ஒரு சவரன் ரூ.30,112-க்கு விற்பனையாகிறது.ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதட்டம் காரணமாக தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து பவுன்ரூ.31 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்தது.சென்னையில் திங்களன்று(ஜன.13) ஒரு கிராம் ரூ.3782-க்கும், பவுன் ரூ.30,256-க்கும் விற்பனையானது. ஜன. 14 அன்று கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.3,764-க்கும், பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.30,112க்கும் விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு30 காசு குறைந்து கிராம் ரூ.49.70-க்கும், கிலோவுக்கு ரூ.300 குறைந்துரூ.49,700-க்கும் விற்பனையானது.

;