tamilnadu

img

தொழுநோய் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகை ரூ.2,500 வழங்குக.... தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கை...

சென்னை:
அரசு மறுவாழ்வு இல்லங்களில் உள்ள தொழுநோய் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகை ரூ.2,500 வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் விடுத்துள்ள அறிக்கைவருமாறு:-தமிழகத்தில் செங்கல்பட்டு, ஈரோடு, புதுக் கோட்டை உள்ளிட்ட 11 இடங்களில் தொழுநோய் மாற்றுத்திறன் நோயாளிகள் குடும்பங்க ளுடன் வசிக்கும் அரசு மறுவாழ்வு இல்லங்கள் உள்ளன.  இந்த முகாம்களில் உறவுகளால் கைவிடப்பட்ட 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.குழந்தைகளுடன் வசிக்கும் இக்குடும்பங்களுக்கு உணவு, உறைவிடம் அரசே வழங்குவதால் குடும்ப அட்டைகள் வழங்கப் படவில்லை. இதனால் அரசு சார்பில் வழங்கப்படும் எந்த ஒரு நிவாரணமோ, சிறப்புத் தொகையோ வழங்கப்படுவதில்லை.

பொங்கல் பண்டிகைக்கு மற்ற சாதாரண குடும்பங்களுக்கு வழங்குவதைப் போன்று வேட்டிசேலை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளோடு குடும்பமாக வசித்தாலும் பொங்கல் பண்டிகையின்போது அரசு வழங்கி வரும் சிறப்பு தொகைகள் இதுவரை இக்குடும்பங்களுக்கு வழங்கப்படுவது இல்லை.  இதனால், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு தேவையான பண்டிகைகால அணிகலன்கள்கூட வாங்கி உற்சாகமாக கொண்டாடிட முடியாமல் மிகுந்த வருத்தத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

குடும்ப அட்டை
எனவே, அரசு, இக்குடும்பங்களுக்கு சிறப்புகுடும்ப அட்டைகள் வழங்கவும், பொங்கல்பண்டிகைக்கு சாதாரண குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ளதைப் போன்று இக்குடும்பங்களுக்கும் பொங்கல் சிறப்புத்தொகை ரூ.2,500 வழங்கி, உற்சாகத்துடன் கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தவும் உரிய உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பிறப்பிக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;